ஓம் சிவமயம்

சிவசிவ என்னச் சிவகதியாமேதந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத்

தொந்தி வயிறனைத் தோடணி செவியனை

இந்திர னுக்கரு ளீந்த இறைவனை

மந்திர ரூபனை நான்மற வேனே.

நல்லூரான் திருவடி

 

நல்லூரான் திருவடியை

நான்நினைத்த மாத்திரத்தில்

எல்லாம் மறப்பேனெடி - கிளியே!

இரவுபகல் காணேனெடி.ஆன்மா அழியாதென்று

அன்றெனக்குச் சொன்னமொழி

நான்மறந்து போவேனோடி - கிளியே!

நல்லூரான் தஞ்சமெடி.தேவர் சிறைமீட்ட

செல்வன் திருவடிகள்

காவல் எனக்காமெடி - கிளியே!

கவலையெல்லாம் போகுமெடி.எத்தொழிலைச் செய்தாலென்

ஏதவத்தைப் பட்டலென்

கர்த்தன் திருவடிகள் - கிளியே!

காவல் அறிந்திடெடி.பஞ்சம்படை வந்தாலும்

பாரெல்லாம் வெந்தாலும்

அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!

ஆறுமுகன் தஞ்சமெடி.சுவாமி யோகநாதன்

சொன்னதிருப் பாட்டைந்தும்

பூமியிற் சொன்னானெடி - கிளியே!

பொல்லாங்கு தீருமெடி.கேட்க:
நல்லூரான் திருவடியை பாடியோர்: சிட்னி சிவதொண்டன் நிலையத்தைச் சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி சோமசுந்தரம், திருமதி புவனம் அருணாசலம், திருமதி பிரேமளா கணேசன்ராஜு, திருமதி அனுஷா தர்மராஜா, திருமதி கேதீஸ்வரி பகீரதன் ஆகியோர்.


Yogaswami's Main Page Next thought

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top